அடி மேல் அடி...ரூ.10 லட்சம் கோடி அவுட்..! அதலபாதாளத்தில் அதானி குழுமம்...தலைதப்புவாரா கவுதம் அதானி.?
கடந்த 20 நாட்களில் அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகளில் ஏற்பட்ட சரிவு, 10 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது
ஜனவரி 24இல் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையின் விளைவாக, கடந்த 20 நாட்களாக, அதானி நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன.
பிப்ரவரி 13 மாலை வரை, 10 அதானி நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பில், 10.2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு, அவற்றின் மதிப்பு 8.99 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
அதானி டோடல் கேஸ் பங்குகளின் மொத்த மதிப்பு 69.2 சதவீதம் சரிந்து, முதலீட்டாளர்களுக்கு 2.96 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி என்டெர்பிரைசஸ் பங்கு மதிப்பு 54 சதவீதம் சரிந்து, அதன் பங்குதாரர்களுக்கு 1.97 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி கிரீன் எனெர்ஜி பங்குகளின் மொத்த மதிப்பு 68.72 சதவீதம் சரிந்து, முதலீட்டாளர்களுக்கு 1.94 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி நிறுவனங்களின் பங்கு விலைகள் தொடர்ந்து சரிந்து வருவதால், இழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.