நெடுஞ்சாலை திரைப்பட பாணியில் கைவரிசை...2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை...

x

ஓடும் சரக்கு லாரியிலிருந்து பொருட்களை கொள்ளையடிக்கும் உண்மை சம்பவங்களை நெடுஞ்சாலை திரைப்படங்களில் காட்சிப்படுத்தியிருப்பார்கள்… கண்ணிமைக்கும் நொடிக்குள் லாரி டிரைவரின் கவனத்தை திசைத்திருப்பி விலையுயர்ந்த பொருட்களை திருடும் இந்த போக்கு இன்று நேற்று நடப்பதல்ல… காலங்காலமாக நடந்து வருவது… கிட்டதட்ட இதே பாணியில் ஒரு கொள்ளை கும்பல் 30 லட்சம் மதிப்புள்ள வேளான் இடு பொருட்களை கொள்ளையடித்திருக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெம்ப்போ டிராவலரிலிருந்து 264 கிராம் தங்கம் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் வைத்து திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்து ஒரு வருடமான நிலையில் மீண்டும் அதே உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் தான் அந்த கொள்ளைச் சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எம்.கே. நகர் பகுதியில் விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு டாரஸ் வாகனத்தில் பொருட்களை அனுப்பிவைத்திருக்கிறார்கள். கிட்டதட்ட 1059 பெட்டிகள் அந்த வாகனத்தில் இருந்துள்ளன. அதன் மதிப்பு சுமார் 1 கோடி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூரை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் டாரசை ஓட்டிச்சென்றுள்ளார். மறுநாள் காலை வண்டி கோயம்புத்தூருக்கு சென்று சேர்ந்திருக்கிறது. வாகனத்திலிருந்த பொருட்கள் இறக்கப்பட்டு கணக்கு பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் 30 லட்சம் மதிப்புள்ள 53 பெட்டிகள் மாயமாகியிருப்பதை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உடனே விழுப்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவுச் செய்த போலீசார் நெடுஞ்சாலையிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போது தான் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை சிசிடிவியில் சுரேந்திரன் ஓட்டி சென்ற டாரஸ்சை இரண்டு மினி லாரிகள் பின்தொடர்ந்த காட்சிகள் பதிவாகியிருந்தது. நடந்த திருட்டுக்கும் அவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகமடைந்த போலீசார், அந்த மினி லாரிகளின் பதிவு எண்களை வைத்து வாகனத்தை இயக்கியவர்களை மடக்கி பிடித்திருக்கிறார்கள்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாரின் சந்தேகம் உண்மை என்று நிரூபனமாகியிருக்கிறது. சம்பவத்தன்று விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் சரக்குவாகனங்கள் செல்வதை நோட்டமிட்ட இந்த மூன்று நபர்களும் சுரேந்திரனின் லாரியை பின்தொடர்ந்திருக்கிறார்கள். உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக இறங்கியிருக்கிறார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்ட கொள்ளையர்களில் ஒருவரான கோவிந்தராஜ் டாரஸில் ஏறி, உள்ளே இருந்த பொருட்களை மினி லாரிக்கு தூக்கிப்போட்டிருக்கிறார். கோவிந்தராஜின் கூட்டாளிகள் அந்த பொருட்களை கீழே விழாமல் மினிலாரியில் ஏற்றியிருக்கிறார்கள். டாரஸ் வாகனத்தைவிட மினி லாரி உருவத்தில் சிறியது என்பதால் நடந்த திருட்டை டாரஸ் டிரைவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுரோந்திரன் வேறு ஒரு இடத்தில் டாரஸ்சை நிறுத்திய போது அதிலிருந்த கோவிந்தராஜ் கீழிறங்கி தன்னுடைய கூட்டாளிகளுடன் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கொள்ளையர்கள் மூன்று பேரை கைதுச் செய்த போலீசார் மற்றொரு கூட்டாளியை தேடி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்