கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு உயர் ரக எரிபொருள் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் பதில்
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மேம்படுத்தப்பட்ட எரி பொருளை ரஷ்ய அணுசக்திக் கழகம் வழங்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள அவர், ரஷ்ய கூட்டமைப்பிடமிருந்து 2022, மே மற்றும் ஜூன் மாத இடைவெளியில்,டிவிஎஸ்-2எம் ரக எரிபொருளின் முதலாவது தொகுப்பு கிடைக்கப்பெற்றதாக கூறியுள்ளார். இது முதலாவது அலகில் தற்போது நல்ல நிலையில் இயங்கி வருகிறது என்றும் குறிபிட்டுள்ளார். இது தவிர, 2021-ஆம் ஆண்டின் 2,724 ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மற்றொரு கேள்விக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இவற்றில் 248 வழக்குகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மத்திய கண்காணிப்பு ஆணையம் அளித்துள்ள தகவலின் படி, 55 வழக்குகளில் உரிய அதிகாரிகள் இறுதி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.