சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை !

x

நீதிமன்ற உத்தரவை மீறி அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக, சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தன்னைப் பற்றி சவுக்கு சங்கர் தெரிவித்து வரும் அவதூறு கருத்துகளுக்கு தடை விதிக்க‌க் கோரியும், மான நஷ்ட ஈடாக 2 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடக் கோரியும், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, அவதூறு கருத்துகளை பதிவிட்டு வருவதாக செந்தில் பாலாஜி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் அவதூறு கருத்து பதிவிட்டதற்காக சவுக்கு சங்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இனி கருத்துக்களை பதிவிடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்