“இனி மே 28 ஆண்டுதோறும் கொண்டாடப்படும்“ - ஆளுநர் ஆர்.என். ரவி

x

டெல்லியில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அறம், தர்மம், நேர்மையை குறிக்கும் செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டிருப்பது தமிழ்நாட்டுக்கு பெருமை என்றார். தொடர்ந்து பேசிய அவர், செங்கோல் நிறுவப்பட்ட தினமான மே 28ஆம் தேதி ஆண்டுதோறும் ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்படும் என்றார். மேலும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சாதி, மதத்தால் இந்திய மக்கள் பிரிக்கப்பட்டனர் எனவும், தற்போது, கலாசாரம், நாகரிகம், ஆன்மிகம் கொண்ட நாடாக இந்தியா விளங்குவதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்