"ஹலோ கண்ணாடி போட்ட சார்.. விஜய் FAN-ஆ கேள்வி கேட்காதீங்க" செய்தியாளர்களிடம் பாய்ந்த பெண்
நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நான் ரெடி பாடல் வரிகளும், காட்சிகளும் போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக ராஜேஸ்வரி ப்ரியா என்ற பெண் ட்வீட்டர் பக்கத்தில் நடிகர் விஜயை விமர்சித்ததாகவும், அதற்காக விஜய் ரசிகர்கள் பலர் தன்னை தரக்குறைவாக விமர்சிப்பதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற பெயரில் உள்ள கட்சியின் தலைவர் என கூறும் பெண் ராஜேஸ்வரி ப்ரியா, நடிகர் விஜய்யின் உத்தரவின் பெயரிலேயே, அவரது ரசிகர்கள் தன்னை அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். எனவே, பணத்தை கொடுத்து மிரட்டல் விடும் நடிகர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என கூறியபோது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கோபமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story