ரோந்து பணியில் நடந்த பெரும் அசம்பாவிதம்.. கடலுக்குள் விழுந்த ஹெலிகாப்டர் - மீட்கும் திக் திக் காட்சி

x

மும்பை கடற்பகுதியில் விபத்தில் சிக்கிய இந்திய கடற்படை ஹெலிகாப்டரை மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் என்ற மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்திற்குள்ளானது. இதனிடையே விபத்தில் சிக்கிய மூன்று பணியாளர்களையும், மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் கடலில் இருந்து ஹெலிகாப்டரை மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்