#Breaking || ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் பலி - உலகை உலுக்கிய பயங்கரம்

ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலியான சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.
#Breaking || ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் பலி - உலகை உலுக்கிய பயங்கரம்
x

உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்தவர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி. இவர், உள்துறை இணை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் தலைநகர் கீவ் நோக்கி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தலைநகரிலிருந்து 20 கிமீ தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.




குறிப்பாக, கீவ்விலிருந்து கிழக்கிலுள்ள பிராவேரி பகுதியில் அமைந்திருக்கும் மழலையர் பள்ளி மீது விழுந்து நொறுங்கியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உள்துறை அமைச்சருடன், இணை அமைச்சரும் அதிகாரிகளும் பலியாகியுள்ளனர். மேலும் பள்ளிக் குழந்தைகள் இருவர் உட்பட 16 பேர் உயிரிழந்திருப்பது உலகையை அதிரவைத்திருக்கிறது. உடனடியாக மீட்புக் குழுவினர் வந்து, உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.





விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 10 குழந்தைகள் உட்பட 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே விபத்து நடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. உக்ரைனில் போர் உச்சக்கட்டத்தை நெருங்கியிருக்கும் வேளையில், நடைபெற்றிருக்கும் இவ்விபத்து முழுக்க முழுக்க ரஷ்யாவின் சதியாக இருக்கலாம் என ஒரு தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனாலும், மோசமான வானிலையும், வெளிச்ச குறைவும் தான் விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்