ஒரே இரவில் வெளுத்து வாங்கிய கனமழை - அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் | தவிக்கும் 15 கிராம மக்கள்

x

தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், 15 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில், சாத்தம்பாடி முட்டுவாஞ்சேரி பகுதிக்கு இடையேயான தரைப்பாலம் சேதமடைந்ததால் புதிதாக தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, போக்குவரத்திற்காக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரியலூரில் நேற்றிரவு பெய்த கனமழையால், தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால், 15 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சுமார் 10 கிலோமீட்டருக்கு சுற்றிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்