கனமழை எதிரொலி - 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் இயங்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் முகாம் நடைபெறும் ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவிற்கு பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு 133 கோடியே 80 லட்ச ரூபாய் ஓதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story