ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை

x

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த கனமழையால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் கனமழை பெய்தது. மணலூர்பேட்டை, திருவரங்கம், வாணாபுரம், திருபாலப்பந்தல், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்