மாயார் ஆற்றில் கடும் வெள்ளம்... ஊட்டியில் துண்டிக்கப்பட்ட கிராமங்கள்

x

ஊட்டி அருகே உள்ள கிளன்மார்கன் அணையானது முழு கொள்ளளவை எட்டியதால் ஆயிரத்து 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மசினகுடி தரைப்பாலத்தை மூழ்கி அதிகளவிலான தண்ணீர் செல்வதால், வாகனங்கள் செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலா பயணிகளை நம்பி இருந்த வாகன ஓட்டிகள், சுற்றுலா வழிகாட்டிகள், தங்கும் விடுதிகள் போன்றவைகளுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்