கொட்டி தீர்க்கும் கனமழை.."வீடுகளை விழுங்கிய வெள்ளம்" - தண்ணீரில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்

x

கேரளாவில் கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பை - அச்சன்கோவில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பம்பை ஆற்றில் உள்ள அரையாஞ்சிலிமன் மற்றும் முக்கம் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. கோட்டயம் வெச்சூர் இடையாழில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்தது. கொச்சி பாலாரிவட்டம் எஸ்.என் சந்திப்பு அருகே சாலையில் இருந்த பெரிய மரம், அருகில் உள்ள ஓட்டல் மீது முறிந்து விழுந்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மாவட்டம் தோறும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்