மனம் இறங்காத ஆம்புலன்ஸ் டிரைவர்கள்.. மனைவி சடலத்தை சுமந்து சென்ற முதியவர் - உறைய வைக்கும் காட்சி

x

மேற்கு வங்கத்தில் ஆம்புலன்ஸ்க்கு அதிகமான கட்டணம் கேட்கப்பட்டதால் 75 வயது முதியவர் மகன் உதவியுடன் மனைவியின் சடலத்தை சுமந்து சென்றுள்ளார்.

ஜல்பைகுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 72 வயது மூதாட்டி லட்சுமிராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுச் செல்ல அவரது கணவர் ஜோய் கிரிஷ்ணா, ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் பேசிய போது, அவர்கள் 3 ஆயிரம் ரூபாய் கேட்டிருக்கிறார்கள். ஆயிரத்து 200 ரூபாய் இருப்பதாகவும், உதவுமாறும் முதியவர்கள் கெஞ்சியும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மனம் இறங்கவில்லை. இதனையடுத்து முதியவர், மகன் உதவியுடன் மனைவியின் சடலத்தை தோளில் தூக்கிக்கொண்டு சொந்த ஊருக்கு நடக்க தொடங்கியுள்ளார். கல் நெஞ்சையும் கரைய செய்யும் இந்த சம்பவம் தெரியவந்து, தொண்டு நிறுவனம் ஒன்று சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுச் செல்ல உதவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்