ஹெட்போனால் தொழிலாளர்களுக்குள் வந்த தகராறு - தலைக்கேறிய போதையால் பலி போன உயிர்

x

கிருஷ்ணகிரியில், ஹெட்போனை தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், தொழிலாளியை அடித்துக் கொன்ற 2 பேரை, பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் என்பவர், பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டடத்தில், நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

இதனிடையே, சக தொழிலாளியான ரஜினி என்பவரின் பிறந்தநாளையொட்டி, 4 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, ரஜினியின் ஹெட்போனை கார்த்திக் பயன்படுத்தியுள்ளார்.

ஹெட்போனை தருமாறு கேட்க, அதனை காரத்திக் தர மறுத்துள்ளார்.

ஆத்திரமடைந்த ரஜினி தனது நண்பர் ரவியுடன் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்கியதில், கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அடுத்தநாள் காலை பணிக்கு வந்தவர்கள் கார்த்திக் இறந்திருப்பதைக் கண்டு தகவல் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், ரஜினி மற்றும் ரவி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்