பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... கொடுத்த தலைமை ஆசிரியர்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தர்மபுரி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைதான தலைமை ஆசிரியருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த சந்திரசேகரன், கடந்த 2016ஆம் ஆண்டு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு தர்மபுரி மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
விசாரணையில் ஆசிரியர் சந்திரசேகரன் குற்றம் செய்தது உறுதியானதையடுத்து , அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Next Story