காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இரண்டு நாட்களில் வலுப்பெற்று, தமிழக கடலோர பகுதிக்கு நகரும் என தகவல்... இன்று கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை...
- ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது ..... மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்கிறார்.....
- ஒரே நாடு ஒரே தேர்தல் முறை, இந்தியாவின் ஜனநாயகத்தை கொன்றுவிடும்.... ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு போராட முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு........
- ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் மரபுப்படி அர்த்த மண்டத்தில் அர்ச்சகர், மடாதிபதிகள் தவிர யாருக்கும் அனுமதியில்லை.... இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரத்தில் அறநிலையத் துறை விளக்கம்...
- கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் உத்தரவுக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை... தமிழக அரசின் மேல் முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்கிறது...
- வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக, நீர்வளம், நகராட்சி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட 5 துறைச் செயலாளர்கள் மனு தாக்கல் செய்ய வேண்டும்... மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு...
- முதலமைச்சரின் செயலாளர் அனுஜார்ஜ் விடுப்பில் செல்வதால், தனிச் செயலாளர்களின் துறைகள் மாற்றம்... வருவாய் துறை செயலாளர் அமுதா உள்ளிட்ட 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு...
- கடந்த 14ம் தேதி நடந்த அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து... தொழில்நுட்ப காரணங்களால் பல்வேறு இடங்களில் இடையூறு ஏற்பட்டதால் நடவடிக்கை.... மறுதேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி ஓ.எம்.ஆர். முறையில் நடத்தப்படும் எனவும் TNPSC அறிவிப்பு...
- தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்... தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில் நிறுவப்படுகிறது...
- பிரான்சின் மாயோட் தீவை சூறையாடிய புயல் வெள்ளம்... ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல்...
Next Story