Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-02-2023) | Morning Headlines | Thanthi TV
வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...
வரி குறைப்பு, வருமான வரி உச்சவரம்பு தளர்த்தப்படுமா என எதிர்பார்ப்பு...
நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்கும்...
பிரதமர் மோடி உறுதி...
பொருளாதார வளர்ச்சியில் 5வது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளதாக, நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரை...
நாடு முழுவதும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்...
வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6 புள்ளி 8 சதவீதமாக இருக்கும்....
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் தகவல்...
டிஜிட்டல் முதலீடுகள், இந்தியாவின் வளர்ச்சி காந்தம் என தலைமை பொருளாதார ஆலோசகர் பெருமிதம்..
மத்திய பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகைகளை எதிர்பார்க்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து...
ஒரே நாளில் 67 ஆயிரம் கோடியை இழந்ததால், அதானியின் சொத்து மதிப்பு 6 லட்சத்து 91 ஆயிரம் கோடியாக சரிவு...
உலக பணக்காரர்கள் பட்டியலில் 11ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்...
பாகிஸ்தானில் கடுமையான விலைவாசி உயர்வு... பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு...
ஏழைகளைத்தான் அரசு கொல்வதாகவும் இனிமேல் பிச்சைதான் எடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானியர்கள் வேதனை...
காதலர் தினத்துக்காக தாய்லாந்தில் சுமார் 10 கோடி ஆணுறைகளை இலவசமாக வழங்க ஏற்பாடு...
சிறார் கருவுறுதலை தடுப்பதற்காக, அரசு மருத்துவமனைகளில் விநியோகம் செய்வதாக தாய்லாந்து அரசு அறிவிப்பு...
ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாக பட்டினம் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு...
அமராவதியை தலைநகரமாக்கும் திட்டம் நிறுத்தம்...
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.....
அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் தீவிரம்...