Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-01-2023) | Morning Headlines | Thanthi TV

x

சட்டப்பேரவையில் "திராவிட மாடல்" என்ற வார்த்தையை தவிர்த்து உரையாற்றினார், ஆளுநர் ஆர்.என்.ரவி...

ஆளுநர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்ததால், அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்...


மத்திய அரசை திருப்திப்படுத்தி, உயர் பதவிகளை பெறுவது தான் ஆளுநரின் நோக்கமா?

அரசின் மசோதாக்களுக்கு பதில் இல்லை என்றும் சபாநாயகர் அப்பாவு பேட்டி...


சட்டப்பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு...

ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தது மரபு அல்ல என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...


வழக்கமாக எதிர்க்கட்சிகளை ஓட விடும் முதல்வர், ஆளுநரையே ஓட விட்டிருக்கிறார்...

அமைச்சர் உதயநிதி ​ஸ்டாலின் பெருமிதம்...


திமுக பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி...


ஆளுநரை மத்திய அரசு தூண்டி விடுவதாக அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு...

இதனால் திமுகவின் வாக்கு வங்கி உயரும் எனவும் நம்பிக்கை...


ஆளும் கட்சியின் எதிர்பார்ப்பை ஆளுநர் பிரதிபலிக்க தேவையில்லை...

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து...


ஆளுநரின் செயலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம்...

ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்