இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-09-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

தமிழ் உள்ளிட்ட மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக்குங்கள்...மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்...

இந்தியாவின் வரலாறும், பண்பாடும் இந்தி மொழியில் புதைந்திருக்கவில்லை...சிறப்புமிக்க தமிழை, பின்னுக்கு தள்ளி இந்திதான் தேசிய மொழி என்ற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே என முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் தகவல்...

பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்தியாவின் மிகப்பெரிய பலமான சகிப்புத் தன்மையின் வலிமையை பறித்து வருகின்றன...கேரளாவின் சத்தானூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு...

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க முயற்சி...ஆயிரத்து 375 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு...

கேரள மாநிலத்தின், மின் கட்டணத்தை ஒப்பிட்டு பார்த்து பேச வேண்டும்...மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கைக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார்...லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் மேல் நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு...

எஸ்.பி. வேலுமணி மீது நிலுவையில் உள்ள வழக்குகளை தகுதியின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்...உச்சநீதிமன்றம் உத்தரவு - வழக்கு முடித்து வைப்பு...


Next Story

மேலும் செய்திகள்