Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27.01.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தேர்தல் பணிக்குழு 2வது நாளாக ஆலோசனை.....

ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் பெயரை இன்று அறிவிக்க வாய்ப்பு....


ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது, தேமுதிக.....

கட்சி நிர்வாகிகளுடன் சென்று வீடுவீடாக வாக்குசேகரித்தார், வேட்பாளர் ஆனந்த்.....


ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ராகுல்காந்தி நடைபயணம்.....

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு.....


சென்னை தியாகராயநகர் மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து.....

அரசு மருத்துவ கல்லூரி மாணவி படுகாயம்....


தமிழில் மந்திரங்கள் முழங்க பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது...

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கடந்த 2006க்குப் பிறகு 16 ஆண்டுகள் கழித்து முருகனுக்கு குடமுழுக்கு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது...

அதிகாலையிலேயே 8ம் கால யாக பூஜைகள் நடைபெற்ற நிலையில், மூலிகைகள் மற்றும் பல்வேறு பொருட்களால் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது...

இவ்விழாவில் அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, எம்.எல்.ஏ செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 4 ஆயிரம் விஐபிக்களுக்கும், 2 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், குடமுழுக்கைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது...


Next Story

மேலும் செய்திகள்