ஒரே நேரத்துல..ரெண்டு பேரா! சங்கடமா இருக்காது! - ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புதிதாக சீரமைக்கப்பட்ட கழிப்பறை கட்டடத்தில், ஒரே அறையில் இரண்டு கழிப்பறை அமைக்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லியாளம் நகராட்சியில் மத்திய அரசின் பொது கழிப்பிட திட்டத்தின் கீழ் 6 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பிட கட்டடம் சீரமைப்பு செய்யும் பணி நடைபெற்று வந்தது. பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், ஒரே அறையில் இரண்டு பேர் அமரும் வகையில் இரண்டு கழிவறைகள் அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு காரணமாக கழிப்பறை பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story