டாம் வைரஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? - உள்ளே ஊடுருவி திருடும் -Contacts, Data, File எல்லாம் காலி

x

கடந்த மாதத்தில் அமெரிக்க வங்கித் துறையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, உலகெங்கும் பங்கு சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. இந்திய பங்கு சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் வெளியேறினர். தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், அன்னிய முதலீட்டளர்கள் இந்திய பங்கு சந்தைகளுக்கு திரும்பியுள்ளனர்.

மே மாதத்தில் இதுவரை 37,317 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு, அதிகபட்ச அன்னிய முதலீடுகள் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் தொடர்ந்து அதிகரித்து, வெள்ளியன்று 62,501ஆக அதிகரித் துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் இது தான் அதிகபட்ச அளவாகும். ஆனால் ரிசர்வ் வங்கி வசம் உள்ள அன்னிய செலாவணியின் அளவு, மே 19ல் 59,347 கோடி டாலராக, அதற்கு முந்தைய வாரத்தை விட 600 கோடி டாலர் அளவுக்கு சரிந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 82 ரூபாய் 56 பைசாவாக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி வசம் உள்ள தங்கத்தின் அளவு, 795 டன்களாக, கடந்த ஆண்டின் அளவை விட 5 சதவீதம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த மே மாதத்தில் பேரலுக்கு 117 டாலராக இருந்து தற்போது 77 டாலராக சரிந்துள்ளது.

இதன் காரணமாக, கடந்த ஒரு ஆண்டாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், ஒரே அளவில் தொடர்கிறது.


Next Story

மேலும் செய்திகள்