சர்க்கரை நோய் இருக்கிறதா? 1 நிமிடம்.. உங்களுக்குதான் தீ, புகையில்லா உணவுகள் - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் செடி
உலகளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்காக உள்ளது. குறிப்பாக, உலகளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 50 விழுக் காடுக்கும் மேலான சர்க்கரை நோயாளிகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியாவில் சர்க்கரை நோயின் பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு வகைகள் குறித்தும் மருத்துவத் துறை கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக, தீயில்லா புகையில்லா உணவுகள் பற்றி அதிக அளவில் வலியுறுத்தப்படுகிறது. இது குறித்த செய்முறைக் காட்சி விளக்க நிகழ்ச்சி சென்னை ஓமந்துாரார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் சிறு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மூலிகைப் பொருட்கள், கீரை வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட் களில், குழந்தைகளுக்கு பிடித்தமான துரித உணவுகள் தயாரிப்பு, சமைக்க வேண்டாத உணவுகளைத் தயாரித்தல் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
சர்க்கரை நோய்க்கு மட்டுமின்றி, ரத்த அழுத்தம், மகப்பேறு இன்மை போன்றவற்றுக்கும், கர்ப்பிணிகள், சிறு குழந்தை களுக்குமான சத்தான உணவுவகைகள் பற்றி மருத்துவ மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் எடுத்துக் கூறினார்கள்.