தி கேரளா ஸ்டோரி பட குழுவினருக்கு ஹேப்பி நியூஸ்..மத்திய பிரதேச முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மத்தியப்பிரதேசத்தில் வரி விலக்கு அளிக்கப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் அறிவித்துள்ளார்.
விபுல் ஷா தயாரிப்பில், இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம். இப்படத்தின் டீசரில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. நாடு முழுவதும் இத்திரைப்படம் 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம், இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளதாக பிரதமர் கூறியிருந்தார். இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு மத்தியப்பிரதேசத்தில் வரிவிலக்கு கொடுக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.