வரதட்சணை கேட்டு மனைவி விரட்டியடிப்பு.. வேறொரு பெண்ணுடன் உல்லாசம்
அந்தியூர் லட்சுமி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த திலகவதி - ஜோதீஸ்வரன் தம்பதிக்கு, கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது, திருமண சீர்வரிசையாக 20 சவரன் தங்க நகைகள் பெண் வீட்டார் சார்பில் வழங்கப்பட்டது. திருமணம் முடிந்த இரண்டே மாதங்களில், வீட்டிலிருந்து மீண்டும் வரதட்சணை வாங்கி வரும்படி, கணவர் ஜோதீஸ்வரன், திலகவதியை கொடுமைப்படுத்தி, தாய் வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து கோரி, கணவர் வழக்கு தாக்கல் செய்த நிலையில், வேறொரு பெண்ணை திருமணம் செய்து, ஜோதீஸ்வரன் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கணவர் தன்னை கொடுமைப்படுத்தினாலும் பரவாயில்லை என்றும், வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் கணவனை மீட்டுத் தருமாறு திலகவதி காவல்நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.