மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் - குப்பை கிடங்கில் தீ வைத்து அழிப்பு

x

புதுக்கோட்டை மாவட்டம் கறப்பக்குடியில் 28 கிலோ எடையிலான குட்கா பொருட்களை போலீசார் தீ வைத்து அழித்தனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் கறம்பக்குடி தெற்கு புதுத்தெருவை சேர்ந்த முகமது இப்ராஹீம் என்பரை கைது செய்த போலீசர், 48 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 28 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அதனை அழிக்க முடிவு செய்த போலீசார், திருமணஞ்சேரி சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ வைத்து எரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்