பாதுகாப்புப்படை, பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு... பயங்கரவாதி சுட்டுக் கொலை
காஷ்மீரில் பண்டித் கொலையில் தொடர்புடைய பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசாரும், ராணுவமும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில், பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
அவர் புல்வாமாவை சேர்ந்த அகிப் முஸ்தாக் பாட் என்றும், தொடக்கத்தில் ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பில் இருந்ததாகவும், தற்போது டி.ஆர்.எஃப் அமைப்பில் இருப்பதாகவும் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
மேலும், பண்டித் கொலையாளி கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story