போலீஸ் எஸ்ஐ-யை பீர் பாட்டிலால் தாக்கி கொல்ல முயன்ற அரை நிர்வாண ஆசாமி.. அதிரடி கைது - கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு
- காவல் உதவி ஆய்வாளரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயற்சித்த, இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு அருகேயுள்ள, மூடப்பட்ட வாகன கட்டுமான தொழிற்சாலையில், சிலர் திருட முயன்றுள்ளனர்.
- தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முகாமை சேர்ந்த பழைய குற்றவாளியான ராபின்சனை, மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர்.
- அப்போது ராபின்சன், காவல் உதவி ஆய்வாளர் சுரேஷையும், தனிப்பிரிவு காவலர் ராமதாஸையும் பீர் பாட்டிலால் தாக்க முற்பட்டார்.
- குறிப்பாக சுரேஷை கொலை செய்யும் நோக்கில் தாக்க முயன்றார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ராபின்சனை, அவர் ஆந்திராவிற்கு தப்பி செல்ல முயன்றபோது கைது செய்தனர்.
- மேலும் இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story