"என் மகன் விரும்பியதால் பாஜக-வில் இணைந்தேன்"... காங்.-க்கு பேரதிர்ச்சி கொடுத்த மோகன்சிங்
அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதால் குஜராத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், 11 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த Chhota Udaipur தொகுதியை சேர்ந்த மோகன்சிங் ராத்வா, பாஜகவில் இணைந்துள்ளார்.
முன்னதாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடால் மோகன்சிங் காங்கிரஸை விட்டு வெளியேற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக காந்தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து, பாஜகவின் மூத்த தலைவர்கள் முன்னிலையில், மோகன்சிங் ராத்வா தம்மை பாஜகவில் இணைத்து கொண்டார்.
ஏற்கனவே இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக தாம் இனி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என மோகன்சிங் ராத்வா தெரிவித்திருந்தார்.
தற்போதும் அந்த முடிவில் உறுதியாக உள்ள மோகன்சிங், தனது மகன் விரும்பியதால் தாம் பாஜகவில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.