குஜராத் சட்டமன்றத் தேர்தல் - குடும்பத்துடன் வாக்களித்த பின் அமித்ஷா சொன்ன தகவல்

x

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்களித்தார்.

அகமதாபாத்தில் உள்ள துணை மண்டல அலுவலகத்தில், தனது மகன் ஜெய்ஷா மற்றும் குடும்பத்தினருடன் வந்து அமித்ஷா வாக்களித்தார்.

தொடர்ந்து அங்குள்ள கோவிலில் குடும்பத்தினருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபாடு செய்தார்.

தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அமித்ஷா, குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்