புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வசூல்

x

நிதியாண்டின் இறுதியில் பல்வேறு பொருட்களின் விற்பனை அளவு அதிகரிப்பதால் ஏப்ரலில், ஜி.எஸ்.டி வசூல் உச்சமடைவது வழக்கம்.

இதற்கு முன்பு அதிகபட்ச ஜி.எஸ்.டி வசூல், 2022 ஏப்ரலில், 1.67 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2023 ஏப்ரலில், ஜி.எஸ்.டி வசூல், 2022 ஏப்ரல் வசூலை விட 12 சதவீதம் அதிகரித்து, 1.87 லட்சம் கோடி ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் மத்திய சி.ஜி.எஸ்.டி அளவு 38 ஆயிரத்து 440 கோடி ரூபாயாகவும், மாநில எஸ்.ஜி.எஸ்.டி அளவு 47 ஆயிரத்து 412 கோடி ரூபாயாகவும் உள்ளது.

ஏப்ரல் 20 அன்று ஒரே நாளில், 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் 68 ஆயிரத்து 228 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூலானது. தினசரி வசூல் அளவில் இது தான் அதிகபட்ச அளவாகும்.

ஏப்ரலில், தமிழகத்தில் 11 ஆயிரத்து 559 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூலாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்