ரூ.500 க்கு ரூ.2000 மதிப்புள்ள மளிகை பொருள்கள்.. நம்பி கட்டுன மக்களுக்கு அதிர்ச்சி..! - சேர்ந்து கம்பி என்னும் கணவன் மனைவி

x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 500 ரூபாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருள்கள் வழங்குவதாக கூறி மோசடி செய்த தேசிய கிராம தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாவட்ட தலைவரை போலீசார் கைது செய்தனர்.

முத்துக்கடை அடுத்த சீனிவாசன் பேட்டையை சேர்ந்தவர் மீரா. இவர் தேசிய கிராம தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், 500 ரூபாய் கட்டினால், 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் மீரா பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பொருள்கள் தரமில்லாமலும், தகுதியில்லாமலும் இருந்ததாக கூறி போலீசில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், மக்களிடம் ஆசை வார்த்தை கூறியும், தரமில்லாத பொருள்களை வழங்கியும் சுமார் 8 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், தேசிய கிராம தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் மீரா மற்றும் அவரது கணவர் தயாளன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்