ஒரே நேரத்தில் வந்த துக்கம், துயரம், ஏழ்மை..அமுதாவுக்கு வந்த ஆஃபர்கள்

x

சேலம் கல்பாரப்பட்டி பகுதியை அமுதா சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் தன் குடும்பத்தினரை இழந்து பரிதவித்தார்... 12ம் வகுப்பில் நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுத்த நிலையில், தனது கல்விக்கு அரசு உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அமுதாவின் ஏழ்மை நிலை குறித்து தந்தி டிவியில் ஏற்கனவே செய்தி ஒளிபரப்பான நிலையில், ஏராளமானோர் உதவ முன்வந்துள்ளனர்... இந்நிலையில், அமுதாவின் கல்லூரி படிப்பிற்கு தேவையான செலவை 3 ஆண்டுகளுக்கு திமுக நிர்வாகியும், மருத்துவருமான மருத்துவர் தருண் என்பவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அமுதா தனியார் கல்லூரியில் பி.காம் சேர்ந்துள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாணவி அமுதாவிற்கு உதவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதன்மை கல்வி அலுவலர் முருகன் தெரிவித்தார். இந்நிலையில், குடும்பத்தில் ஒருவராய் உறுதுணையாக இருந்த தந்தி தொலைக்காட்சிக்கு அமுதா நன்றி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்