சென்னையில் பிரம்மாண்ட புதிய விமான முனையம் சேவை தொடக்கம்

x

மீனம்பாக்கம் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் முழுமையான பன்னாட்டு விமான சேவை தொடங்கியது.

சென்னை மீனம்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்தை, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி திறந்து வைத்தார். அந்த முனையத்தில் இருந்து ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி முதல், சோதனை ஒட்டம் தொடங்கியது. பின்னர் கூடுதல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு,

மே மாதம் 3-ஆம் தேதி முதல், சோதனை முறையில் சில விமானங்கள் இயக்கப்பட்டன. முதலில் சிறிய ரக விமனங்களும், பின்னர் நடுத்தர மற்றும் பெரிய ரக விமானங்களும் இயக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தினமும் 51 புறப்பாடு விமானங்களும், 51 வருகை விமானங்களும் என 102 விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போது, புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்