விட்டு விட்டு கிடைக்கும் ஜிபிஎஸ் தொடர்பு... மீண்டும் இறங்கப்போகிறானா அரிக்கொம்பன்..? - அச்சத்தில் தொழிலாளர்கள்

x

தேனி மாவட்டம் கம்பத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானையை, கோதையாறு அணை அருகேயுள்ள குட்டியாறு டேம் பகுதியில் வனத்துறையினர் கொண்டு விட்டனர். தொடர்ந்து அணை நீரில் இறங்கி குளித்த அரிக்கொம்பன் இரு தினங்களாக அப்பகுதியில் முகாமிட்டு இருந்தது. தொடர்ந்து அங்குள்ள உணவுகளை சாப்பிட்டு நல்ல நிலையில் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி அதனை செயலி மூலமாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் அரிக்கொம்பன் யானை ஜி.பி.எஸ். தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் நாலுமுக்கு, ஊத்து பகுதிகளை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள வனத்துறை அதிகாரிகள்,

மதிய வேளை என்பதால் ஜி.பி.எஸ். தொடர்பு விட்டு விட்டு கிடைப்பதாகவும், தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பில் அரிக்கொம்பன் யானை உள்ளதாகவும் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்