காங்., வாக்குறுதிகளால் கர்நாடகாவில் அடிவாங்கும் அரசு ஊழியர்கள் - கடும் ஆத்திரத்தில் மக்கள்

x

கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் பிரச்சாரத்தின்போது 200 யூனிட் மின்சாரம் இலவசம், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் உள்ளிட்ட 5 உத்தரவாதங்களை அளித்தது. இத்தகைய உத்தரவாதங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில், கிரக ஜோதி திட்டத்தின் கீழ் வீட்டிற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவாதத்தை சுட்டிக்காட்டி, பல இடங்களில் மின்வாரிய ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொப்பல் மாவட்டம் குகனபள்ளி கிராமத்தில் மின் கட்டணம் வசூலிக்க சென்ற மின்வாரிய ஊழியர் மஞ்சுநாத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த ஹிரேமட் என்பவர் தாக்கியதால் பரபரப்பு நிலவியது. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் சிலர், பயணச்சீட்டை பணம் கொடுத்து வாங்க மறுத்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்து சில தினங்களே ஆன நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்