பாவ நாடகம் போட்ட அரசு அதிகாரி.. சோறு கொடுத்ததால் கர்ப்பமான ஊழியர் - கோவையில் பகீர் சம்பவம்
கோவையில் இளம்பெண்னை பாலியல் வன்கொடுமை செய்த பத்திரப்பதிவு அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை அன்னூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் இளநிலை உதவி அலுவலராக பணியாற்றி வருபவர் பிரபாகரன். இதே அலுவலகத்திற்கு, தனியார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றக் கூடிய இளம்பெண் வேலை நிமித்தமாக அடிக்கடி வந்துள்ளார். அப்போது பிரபாகரனுடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இளம் பெண்ணிடம் தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறி, பிரபாகரன் சாப்பாடு வாங்கி வருமாறு தெரிவித்து இருக்கிறார். இதனை நம்பிய இளம்பெண் சாப்பாடுடன் பிரபாகரன் வீட்டிற்கு சென்றார். அப்போது இளம்பெண்ணை கட்டாயபடுத்தி பாலியல் வன் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், சில மாதங்களுக்கு முன் இளம் பெண் கர்ப்பம் அடைந்தது பிரபாகரனுக்கு தெரியவந்துள்ளது. கர்ப்பத்தை கலைத்து விட்டு வந்தால் திருமணம் செய்து கொள்வதாக பிரபாகரன் இளம் பெண்ணிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதால், இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பிரபாகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.