அரசு பேருந்து-கார் மோதி விபத்து.. நொறுங்கிய கார்..டிரைவர் துடிதுடித்து பலி - நெல்லையில் அதிர்ச்சி
நெல்லை மாவட்டம், தச்சநல்லூர் அருகே அரசு பேருந்தும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில், கார் ஓட்டுநர் உயிரிழந்தார். நெல்லை பேருந்து நிலையத்திலிருந்து கோவில்பட்டி நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த நபர் சிதம்பரம் நகரைச் சேர்ந்த நீர் காத்தலிங்கம் என்பது தெரிய வந்தது. இந்நிலையில், தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
Next Story