அரசு பேருந்து பழுதாகி நிற்கவே.. பால் வண்டியில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி - சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பால் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்ததில், கூலித் தொழிகள் படுகாயமடைந்தனர்.
ஆத்தூர் அருகே பைத்தூர், கல்லுப்பட்டு, வானவரம் போன்ற பகுதிகளை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் கூலி வேலைக்கு சென்று விட்டு அரசு பேருந்தில் வீடு திரும்பியுள்ளனர். மாரியம்மன் நகர் அருகே சென்றபோது, பேருந்து திடீரென பழுதானதால், பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். அப்போது, அந்த வழியாக பால் ஏற்றி சென்ற சரக்கு வாகனத்தை மறித்த கூலித் தொழிகள், அந்த வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளனர். அந்த வாகனம், சிறிது தூரத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், 15 க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story