"ஆளுநர் பதவியே தேவையில்லை.." "பேரவை வரலாற்றில் இன்று கரும்புள்ளி" - டிடிவி.தினகரன் காட்டம்
ஆளுநர் உரையின்போது நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை என்றும், தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வு ஒரு கரும்புள்ளியாகிவிட்டது என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரையைத் தயாரித்து அச்சுக்கு அனுப்புவதற்கு முன்பே இந்தக் கருத்து வேறுபாடுகளை ஆளுநர் மாளிகையும், அரசும் சரிசெய்திருக்க வேண்டும் என்று தமது டுவிட்டர் செய்தியில் கூறி இருக்கிறார். அப்படிச் செய்யாமல் விட்டதால்தான் பேரவையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன என தெரிவித்துள்ளார். மோதல்போக்கு ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Next Story