கால் இடறி கீழே விழுந்த ஆளுநர் - பீகாரில் பரபரப்பு
பீகாரில், நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கால் இடறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைநகர் பாட்னாவில் காலை முதல் மழை பெய்து வந்தது. இதனிடையே, அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணா மெமோரியல் ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அங்கு வந்தார். அப்போது, தரையில் போடப்பட்டிருந்த பாய் ஈரமாகியிருந்ததால், அதில் கால் வைத்தபோது, கால் இடறி விழுந்தார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. எனினும், நிகழ்ச்சியில ஆளுநர் பங்கேற்று, மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் முங்கேரி லாலின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தார்.
Next Story