ஆளுநர் தமிழிசைக்கு எதிரான வழக்கு - தெலங்கானா அரசின் கோரிக்கை ஏற்ற உச்ச நீதிமன்றம்

x
  • தெலங்கானா ஆளுநருக்கு எதிரான, மாநில அரசின் மனு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது...
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக, தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
  • தலைமைச் செயலாளர் சாந்தி குமார் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில், பேரவையில் நிறைவேற்றப்பட்ட முனிசிபல் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 14ம் தேதி தொடங்கி நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.
  • ஆளுநரின் செயல்பாடு அரசமைப்பு உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்ற அவர், நிலுவையிலுள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார்.
  • இந்நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிய தெலங்கானா அரசின் முறையீட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம், வருகிற 27ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்