ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிரடி உத்தரவு
தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என். ரவி ஆலோசனை நடத்தினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்தி விட்டார்களா என்பது தொடர்பான கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை விரைவாக பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த வேண்டும் எனவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story