இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஆளுநர் மரியாதை ஆர்.என். ரவி மரியாதை

x

எட்டிவயல் கிராமத்தில் உள்ள இயற்கை விவசாய பண்ணையை பார்வையிட்ட பின்னர், பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பில், ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை செய்து, மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இமானுவேல் சேகரனுக்கு சிலை அமைக்க வேண்டும், மணிமண்டபம் கட்ட வேண்டும், அவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநர் ரவியிடம் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்