"பேரவையில் சட்டம் இயற்றுவதை ஆளுநர் தடுக்க முடியாது"

x

தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத் தலைவராக ஆளுநருக்கு சில அரசியலமைப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், அவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டப்பேரவை சட்டமியற்றுவதைத் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவித்து மாநில அரசு தாக்கல் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.. இந்த உத்தரவு நவம்பர் 10- ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் இன்று விரிவான தீர்ப்பு வெளியானது.

"தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத் தலைவராக ஆளுநருக்கு சில அரசியலமைப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், மாநில சட்டமன்றங்களின் இயல்பான சட்டத்தை முறியடிக்க இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் உண்மையான அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளுக்கே உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு கட்டுப்பட்டவர்களாக உள்ளனர்.அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஏற்ப ஆளுநர் செயல்படுகிறார். இதுவே ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் செல்லுபடி தன்மை குறித்து சந்தேகம் எழுப்ப ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.கடந்த ஜூன் 19, 20 தேதிகளில் பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அளிக்கப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டு


Next Story

மேலும் செய்திகள்