ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு

x

தமிழக அரசின் ஆன்-லைன் சூதாட்ட அவசரத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததை வரவேற்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை

வெளியிட்டுள்ளார்.

ஆன்-லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டு பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்ததையடுத்து, அதனை தடை செய்யக்கோரி அவசர சட்ட மசோதாவிற்கு, கடந்த மாதம்

நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போது, அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனை வரவேற்கும் விதமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், 17-ம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அதனை சட்டமாக இயற்றவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்