"தமிழர்களின் உணர்வுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்"... உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் தள்ளுமுள்ளு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, புதுச்சேரி காமராஜர் சிலை அருகே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனிடையே, ஆளுநரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story