"2 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுக்கும் இஸ்லாமியர்களுக்கு அரசு வேலை தர கூடாது" - தீயாய் பரவும் சர்ச்சை வீடியோ

x

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுக்கும் இஸ்லாமியர்களுக்கு அரசு வேலை, அரசு உணவு, அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகளில் இலவச சேவை, வங்கிக் கடன் போன்ற வசதிகள் கிடைக்காத வகையில் சட்டம் இயற்றப்பட்ட வேண்டும் என விசுவ இந்து பரிஷத்தின் முன்னாள் செயல் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், மேலும் குழந்தை பிறந்தால் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். இந்துவை தவிர வேறு யாரையும் நாட்டை ஆள விட மாட்டோம் என்றும் அதற்காக அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவோம் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்