கட்டணத்தை செலுத்தாததால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு - மரத்தடியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

x

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் உள்ள அனவன் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியின் கடந்த மாத மின் கட்டணத்தை செலுத்தாததால் 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். பள்ளி வளாகத்திலுள்ள மரத்தடியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிறு குழந்தைகளின் நலன் கருதி, மனிதாபிமான முறையில் மின்சாரம் வழங்கியிருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை தங்களுக்கு மின்கட்டண பில் தரவில்லை என்றும், தங்கள் பள்ளியில் மட்டுமே மின்விநியோகத்தை அதிகாரிகள் துண்டித்திருப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், 15 நாள் அவகாசம் அளித்த பிறகே மின் விநியோகத்தை நிறுத்தி இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

==


Next Story

மேலும் செய்திகள்